எனது முதல் தமிழ்ப்பதிவு

‘தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’

வணக்கம். ஆயிரம் மொழிகள் நாம் அறிந்திருந்தாலும் தாய் மொழியில் பேசும்போது, எழுதும் போது கிடைக்கும் ஆனந்தம் மற்ற மொழிகளில் கிடைப்பதில்லை. இணையத்தில் தாய் மொழியில் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இன்று மெய்ப்பட்டது. எப்போதுமே எனக்கு தமிழின் மீது மட்டற்ற மரியாதையையும், பற்றும் உண்டு. எனது கருத்துக்களை, தமிழில், தமிழ் நெஞ்சங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பதிவு. அவ்வப்போது வரும் ஆங்கில வார்த்தைகளை அர்ஜெண்டுக்கு ஆங்கிலம் வந்தால் தவறில்லை என பொறுத்தருளவும். முடிந்த வரை அடிக்கடி பதிய முயற்சிக்கிறேன். வாசித்து மறுமொழி இடவும். நன்றி.

Advertisements

குறிச்சொற்கள்:

2 பதில்கள் to “எனது முதல் தமிழ்ப்பதிவு”

  1. யோகேஷ் Says:

    இனிய தமிழ் கரை புரண்டோட வாழ்த்துக்கள்! தமிழில் எழுத பிரயோகித்த எழுத்து வகை (ஃபாண்ட்) நெருப்பு நரியில் (பயர்பாக்ஸ்) சரியாக காட்டப்படவில்லை. ஒற்றை சங்கேத (யுனிகோடு) முறையை பயன்படுத்தினால் மேலும் சிறப்பு!

  2. Lakshminarayanan Says:

    நன்றி யோகேஷ். தற்சமயம் என்னிடம் ஒற்றை சங்கேத முறையில் எழுதுவதற்கான உபகரணங்கள் ஏதும் இல்லை. அடுத்த பதிவில் இருந்து கண்டிப்பாக பயன்படுத்துகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.


%d bloggers like this: