இணையத்தில் பிராமண துவேஷம்

என்று ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்தார்களோ அன்று ஆரம்பமானது இந்த பிரச்சனை. பிராமணர்கள் தமிழர்கள் அல்லர். அவர்கள் ஆரியர்கள். அவர்கள் தங்களது வழிமுறைகளை தமிழர்களிடம் புகுத்தி விட்டனர். அவர்களால்தான் இந்த சாதீயமுறை வந்தது. இவ்வாறெல்லாம் பல்வேறு அவதூறுகள். தாங்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த திராவிடத் தலைவர்கள் இந்த விஷச் செடிக்கு நீர் விட்டது பத்தாது என்று அதை உரம் போட்டு வளர்த்து விட்டனர். ‘பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு, பார்ப்பானை அடி’ என்று சொல்லும் அளவுக்கு துவேசத்தை தூண்டி விட்டனர். போதுமான வரையிலும் பிராமணர்களை கல்வி, அரசு வேலைவாய்ப்பு, சமூக மரியாதை என்று அனைத்து விதத்திலும் ஒதுக்கியாகி விட்டது. ஆகவே இந்த துவேஷங்கள் கொஞ்சம் குறைந்து இருந்தன.

இதெல்லாம் சற்றே ஓய்ந்திருக்கும் வேளையில் (இன்னும் கருணாநிதி போன்றோர் ஓயவில்லை என்பது உண்மை…அவரை யாரும் சட்டை செய்வது இல்லை என்பதும் உண்மை), இப்போது புதிதாக முளைத்திருக்கிறது ஒரு களை. கழகக் கண்மணிகளும், எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் தங்களை காட்டிக் கொள்ளும் அறிவிலிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் எதிர்ப்பை இணையத்தில் காட்டி வருகின்றனர். தமிழர்களிடம், ஏன் ஒரு தமிழனென்ற முறையில் என்னிடமும் உள்ள ஒரு பிரச்சனை, உணர்ச்சி வசப்படுவது. யாராவது எதாவது சொன்னால் முன் பின் யோசிக்காமல் அப்படியே நம்பி விடுவது. இது அரசியல் வாதிகளுக்கு பெரிதும் பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுக் கொண்டிருக்கிறது, இப்படியே தமிழன் தூங்கிக் கொண்டிருந்தால் அப்படியே பயன்படும். இல்லையென்றால் இந்தி திணிப்பை காரணம் காட்டி ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? அவர்களுக்கு எப்போதெல்லாம் ஒரு காரணம் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் பிராமண துவேஷம் அவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது.

சரி. இவர்கள் ஏன் மற்ற எந்த உயர் சாதி என்று சொல்லப்படும் யாரையும் குறி வைக்காமல் பிரமணர்களை மட்டும் தாக்கி வருகின்றனர்? ஏனென்றால், பிராமணர்கள் மைனாரிட்டி. மொத்தத்தில் தமிழகத்தில் 3 சதவீதத்துக்கு குறைவாகவும், இந்திய அளவில் 5 சதவீதத்துக்கு குறைவாகவும் உள்ள ஒரு சமூகம்.
அந்த ஓட்டும் ஒரே இடத்தில் இல்லை. வன்னியர்கள் வட தமிழ்நாடு, நாடார்கள் சிவகாசி, விருதுநகர் பகுதிகள், தேவர்கள் ராம்நாடு, முஸ்லிம்கள் வாணியம்பாடியில் உள்ளதைப் போல் பிராமணர்கள் மட்டுமே பெருவாரியாக வாழும் தொகுதியோ அல்லது பகுதியோ எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கும் ஒன்று இரண்டு இடங்களிலும் அவர்களை ஏய்த்து சமாளித்து விடுகின்றன கழகங்கள். உதாரணம் S.V.சேகர் மைலாப்பூர். இருக்கும் கொஞ்ச நஞ்ச பெரும் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் தெரியாது. ஒற்றுமை கிடையாது. என்ன சொன்னாலும் கேட்க நாதி கிடையாது. இந்த தைரியத்தில்தான் ஒன்றும் தெரியாத ஜடங்கள் கூட தனக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக்கொண்டு திரிகின்றன.

அவர்கள் எழுதுவதிலாவது ஏதாவது உண்மையோ இல்லை தக்க காரணமோ இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு முண்டம் பிராமணப் பெண்கள் சினிமாவில் நடிப்பதை பற்றியும் கற்பைப் பற்றியும் எழுதுகிறது. கற்பு என்பது பிராமணப் பெண்களுக்கு மட்டும்தானா? மற்றவர்களுக்கு இல்லையா? இன்னொன்று பிராமணர்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய கூடாது, கடல் தாண்டக் கூடாது என்று வேதம் சொல்லியுள்ளது. உண்மைதான். மனிதம் மறந்து நசுக்கப்பட்டால் பாவம் பிராமணர்கள்தான் என்ன செய்வர். வேதம் குறிப்பிட்ட வாழ்கை முறை ‘brain drain’ஐ தவிர்க்க அக்காலத்தில எடுக்கப்பட்ட முயற்ச்சிஆனால் அவ்வாறு வாழ குடுப்பினையோ வழிமுறைகளோ இன்றைய பிராமணர்களுக்கு வழங்கப்படவில்லை.
ராமர் பாலம் கட்டிதான் இலங்கைக்கு சென்றார் என்பதை உதாரணமாக கொடுக்கிறார் ஒருவர். ராமர் சத்ரியர் என்பதையே மறந்து விட்டது அந்த ஜடம். இதெல்லாம் போதாதென்று ஏதோ எல்லா வேதங்களையும், உபநிஷதங்களையும், மனு ச்மிரிதியையும் படித்து விட்டது போல் ஏகப்பட்ட உளறல்கள். நான் ஏதாவது உதாரணத்துடன் மறுமொழி கொடுத்தால் அதையும் மறுத்து விடுவது.
சரி. நான் என்னதான் சொல்ல வருகிறேன்.

இவ்வாறு தூற்றத்தக்க வகையில் பிராமணர்கள் இப்போது என்ன தவறு செய்கிறார்கள்? மற்றவர்களைப் போல், ஏன் மற்றவர்களை விட்ட ஒழுக்கமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வரும் சக தமிழர்களை ஏன் இவ்வாறு இகழ வேண்டும்? ஏன் சம நிலையில் உள்ள அப்பாவிகளின் மனதில் விஷத்தை விதைக்க வேண்டும்? எந்த பிராமணனும் இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. எந்த பிராமணனும் பேருந்துகளை கொளுத்துவது இல்லை. பிராமணர்களுக்கு என்று ஒரு அரசியல் கட்சி கிடையாது. கோரிக்கைகள் கிடையாது. இருந்தும் இந்த துவேஷம் ஓயவில்லை. எனவே பொறுத்துப் பார்த்து பயனில்லை என்று, உண்மைகளை வெளிக்கொணரவும், பல பேர் முகமூடிகளை கிழித்தெறியவும் நான் இந்த பதிவை எழுத வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப் பட்டேன்.

சரி, இவர்கள் சொன்ன, சொல்கின்ற அனைத்தும் தவறு என்று சொல்கிறேனே அதற்கு ஆதாரம் உண்டா? ஆதாரம் வேண்டுமெனில் சோ எழுதிய ‘வெறுக்கத்தக்கதா பிராமணியம்’ என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை கிடைக்கும். இத்தனை நாள், அரசியல் கட்சிகளும், தலைவர் என்று கொண்டாடப்படும் சிறிய மனிதர்களும் எவ்வாறு தமிழர்களை ஏய்த்து வருகின்றனர் என்பதும் அப்பட்டமாக விளங்கும். இப்புத்தகம் மைலாப்பூர் கபாலி கோவில் குளத்திற்கு எதிரே உள்ள ‘Alliance Company’ல் கிடைக்கும். விலை 35 ரூ மட்டுமே. இதை ‘Giri Trading’லும் வாங்கலாம்.

நான் இனி வரும் நாட்களில் இப்புத்தகத்தில் இருந்து சில முக்கிய தகவல்களையும், உண்மைகளையும், வாதங்களையும், என் கருத்துகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து படித்து தெளிவடையுங்கள். என் முயற்சிக்கு உங்கள் ஆதரவுக்கரம் மிகவும் அவசியம். எந்த விதமான தர்க்கத்துக்கும் நான் தயார்.

—– லோக சமஸ்தா சுகினோ பவந்து —-
(தொடரும், அகத்தெளிவு பிறக்கும் வரை)

Advertisements

குறிச்சொற்கள்: , ,

14 பதில்கள் to “இணையத்தில் பிராமண துவேஷம்”

 1. kalyanakamala Says:

  அப்பாட வந்தீங்களா? ரொம்ப தாங்கல்ல சார் தொல்லை.பிராமணர் என்பதனால பாரதி வாங்கற திட்டுகளை சகிக்க‌ முடியல்லெ.
  அன்புடன்
  கமலா

 2. Lakshminarayanan Says:

  அதே காரணத்தால்தான் நானும் வந்தேன் திருமதி கமலா அவர்களே. தொடர்ந்து படியுங்கள்.

 3. முனியப்பன் Says:

  இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு!
  ———————————————————-

  தமிழகத்தில் இந்தி மொழி பேசுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. யாரால்? நமது ‘தமிழ்’ அறிஞர் மு.க.வால்!

  தமிழகத்திலுள்ள பறப்பங்களை பாருங்கள்! தமிழ் பேசும் பாதுகாப்பு ஊழியர்கள் யாருமே இல்லை. கருணாநிதி தமிழ் அறிக்கைகளை கொண்டுவர உறுதிமொழி அளித்திருந்தார். இப்போது தமிழ் மொழியை நீக்கிவிட்டனர் என்று தான் உண்மை.

  கருணாநிதி இப்போது தமிழகத்தில் பண்பலை வானொலிகளில் வரும் கொச்சையான இந்தி பாடல்களின் அறிமுகத்திற்கு பெருமை பெற்றவர்.

  தமிழகத்தில் உள்ள OBC பட்டியலை பாருங்கள். URDU என்கிற சொல்லு நிறைய பொறுத்தங்கள் உள்ளன. இந்த URDU ஜாதிகள் வீட்டினுள் தமிழ் மொழி பேசாமல் இந்தியைத் தான் பேசுவார்கள்.

  ‘தமிழ்’ அறிஞர் மு.க.வின் மகள் ‘தமிழ்’ கவி க(ன்)னிமொழி உலகம் புகழ் போற்றும் பாரதியாரை அண்மையில் நடந்த ஒரு விழாவில் அவமதிக்கும் விதத்தில் சாடியுள்ளார்.

  தமிழ் தாய் வாழ்த்து பாடலையே வரிமாற்றி விட்டனர்.

  அது சரி இந்தி பேசும் ஜாதிகள் வருக, தமிழ் முற்பட்டோர் என ஒழிக என்றே அமைந்துள்ளது ‘தமிழ்’அகத்தின் இடஒதுக்கீடு கொள்கையே.

  கர்நாடகத்தில் அவ்வாறு இல்லை. கன்னட மொழிக்கே முன்னுரிமை உள்ளது.

  தமிழ் என்கிற பெயரை வைத்து தமிழுக்கு துரோக செய்கின்றன நமது தமிழ்த் தலைவர்கள்.

  இதில் வேடிக்கை என்னவென்றால் கர்ணாநிதி, பெரியார், வைக்கோ, போன்ற ‘தமிழ்’ தலைவர்கள் தெலுங்கு, கன்னடம் போன்ற இதர மொழியினத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் தானே ராமர் பாலம் போன்ற கலாச்சாரச் சின்னங்களை அழிப்பது, இந்தி பேசுவோர் வாக்கு, இந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுவோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது ஆகியவற்றுக்கெல்லாம் தனி இன்பம் புரிகின்றனர்!!!

 4. Lakshminarayanan Says:

  வேதனைக்குரிய உண்மை முனியப்பன் அவர்களே. ஆனால் நம் மக்களுக்கு இது புரியவில்லையே. இந்தியை எதிர்க்க வேண்டும் என்று ஒரு காலத்திலும் நான் கூறவில்லை. ஆனால் தமிழ், தமிழ் என்று சொல்லி ஓட்டு வாங்கும் தலைவர்கள் அதற்காக ஆக்கப்பூர்வமாக ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. திராவிடக் கொள்கை என்ற முகமூடியில் தமிழை ஒரு காரணமாக வைத்து தமிழர்களை ஏய்த்து வருகின்றனர். இது பிராமண எதிர்ப்புக்கும் அவர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. அண்மையில் நடந்த சிதம்பரம் சம்பவமே இதற்கு நல்ல உதாரணம். இதைதான் சோ அவரது புத்தகத்தில் சொல்கிறார்.
  ‘ வீட்டிற்குள் தெலுகு, கன்னடம், இந்தி பேசும் தலைவர்கள் கழகங்களில் இருப்பதால் அவர்கள் தமிழர்கள். ஆனால் தமிழனாக பிறந்து, வீட்டுக்குள்ளும் வெளியிலும் தமிழில் பேசி, இறைவனை வடமொழியில் துதித்து பின் தனது கோரிக்கைகளை இறைவனிடத்தில் தமிழிலேயே வைக்கும் பிராமணர்கள் தமிழர்கள் அல்லர். இது வாதமா, விதண்டாவாதமா?’. இவர்களிடத்தில் பதில் உள்ளதா?

 5. நண்பர் லக்ஷ்மிநாராயணனுக்கு… « ஊருக்கு நல்லதைச் சொல்வேன்… Says:

  […] நண்பர் லக்ஷ்மிநாராயணனுக்கு… லக்ஷ்மிநாராயணன் என்ன சொன்னார்.  […]

 6. vijaygopalswami Says:

  நண்பர் தவறாமல் எனது பதிவைப் படிக்கவேண்டும். தங்களுக்கு பின்னூட்டம் அளிப்பவர்களையும் படிக்கச் சொல்லவும். நன்றி.

  http://oorukkunalladhu.wordpress.com/2008/03/

 7. Lakshminarayanan Says:

  விஜய்கோபால் சுவாமி (தங்களது உண்மையான பெயர் தெரியவில்லை) ,

  எனக்கு அகத்தேளிவு ஏற்கனவே உள்ளதால்தான் இந்த பதிவை எழுதினேன் நண்பரே. என் கேள்விகளுக்கு பதில் எழுத தாங்கள் ஒரு வலைப்பதிவையே தொடங்கி உள்ளீர்கள் என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது.

  துவேஷம் ஆரம்பமானதற்கு பிராமணர்கள் மட்டுமே காரணம் அல்ல என்பதே என் வாதம். அப்படியிருக்க, பிராமணர்களை மட்டும் தொடர்ந்து சாடி வருவது ஏன்? நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் நூற்றில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் மற்ற 99 சம்பவங்களும், பதிவுகளும் பிராமண துவேஷதையே முன்னிறுத்துகின்றன. பிராமணர்கள் தமிழர்கள் அல்லர் என்ற உங்கள் ஆரம்ப வாதமே அடிப்படை இல்லாதது. அதை இனி வரும் காலங்களில் நான் ஆதாரதுடன் விளக்குகிறேன்,

  நேற்று வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த என்ற வாக்கியமே தவறு. இன்றும் பிராமணர்கள்தான் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். என்றில் இருந்து ஆரம்பமானது இந்த போராட்டம்? கோவில்களில் வருமானம் உள்ளது என்பது தெரிந்த பின்தானே? நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அக்கோயில்களை கட்டிக்காப்பற்றி, ஆகம முறைப்படி அனைத்தும் செவ்வனே செய்து வரும் பிராமணர்களை திடீரென இன்று வந்து எங்களுக்கும் உரிமை வேண்டும் என்று சொல்வது எவ்விதத்தில் நியாயம்? பெரிய கோயில்களை விடுத்து, சிறிய மற்றும் மிகச்சிறிய கோயில்களின் அர்ச்சகர்களின் வருமானம் பற்றி தங்களுக்கு ஏதேனும் தெரியுமா? அவர்கள் படும் துயரை நேரடியாக பார்த்தவன் நான். பிராமணர்கள் மட்டுமே கஷ்டப்படுகிறார்கள் என்று நான் சாடி வரும் மற்றவர்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பிராமணர்கள் அனைவரும் நீங்கள் அனைவரும் நினைப்பது போல் வசதியாக இல்லை என்பதே என் கருத்து.

  IIM, IIT மற்றும் அனைத்து பிற கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ஏற்கனவே உள்ளது. அதை உயர்தியதைதான் அனைவரும் எதிர்த்தனர். பிராமணர்கள் மட்டும் அல்ல. அனைத்து FC க்களும் அதனை எதிர்த்தனர். இங்கு மட்டும் அல்ல, எல்லா ராகவேந்திரர் கோயிலிலும் அவ்வாறுதான். அது அவர்களின் ஒரு வழிமுறை. ஏன், உங்கள் பெரியார் திறந்து விட்ட கதவுகளைக் கொண்ட கேரள கோயில்களிலும் இதே நிலைதான். இதில் அவர்கள் பாகுபாடு காடுவதில்லையே. பிராமணர்களையும் அதேபோல்தான் நடத்துகின்றனர். இதன் பின் உள்ள கோட்பாடு நான் எடுத்து உரைத்தாலும் நாத்திகரான நீங்கள் ஒத்துக்கொள்ள போவதில்லை.

  என் பதிவுகளை தொடர்ந்து படித்து வாருங்கள். கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும், அகத்தெளிவு பிறக்கும்.

 8. முனியாண்டி Says:

  தமிழகத்தில் ஜாதி ஒழித்து கட்டுபவன் தான் தமிழ் வீரன். இல்லாவிட்டால் வெறும் தமிழ் பெயர் கொண்ட துரோகி.

  சீனா போல் நாஸ்திக சட்டம் வேண்டும். ஆனால் ஆஸ்திக ஆளுமை வேண்ட்டும். நமது ‘தமிழ்’ அரசியல் வாதிகள் பெயருக்குத் தான் நாஸ்திகர்கள். நாஸ்திகர்களுக்கு ஜாதி பிடிக்காது.

  ஆனால் அப்படியில்லையே ‘தமிழ்’நாட்டு அரசு. எப்ப இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு தமிழத்தில் இட ஒதுக்கீடு வந்தோ ஆகிவிட்டது தமிழிலா நாடு. செத்துப்போயிற்று தமிழ் மொழி. ஜாதி முதலில் ஒழிக்க, இல்லாவிட்டால் அழிந்துவிடும் தமிழே!

 9. sathappan Says:

  Lakshminarayanan sir,

  What a joke !LOL ….. please read below again ..

  “”சரி, இவர்கள் சொன்ன, சொல்கின்ற அனைத்தும் தவறு என்று சொல்கிறேனே அதற்கு ஆதாரம் உண்டா? ஆதாரம் வேண்டுமெனில் சோ எழுதிய ‘வெறுக்கத்தக்கதா பிராமணியம்’ என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.””

  சோ… சோ are you joking man?
  who will accept சோ’s writting . he is sick n biased man.Everybody in tamil nadu why india knew about சோ..
  சோ’ s wrttings will not goooooo beyound mylapore..

  Please give some reference books or documents wriitn by some one defnitly not சோ..

 10. Lakshminarayanan Says:

  திரு சாத்தப்பன் அவர்களே,

  முதலில் ஒரு மனிதர் இப்படித்தான் என்று ஒரே கண்ணோட்டத்தோடு (Stereotype) பார்க்கும் குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். சோ, அரசியலில் வேண்டுமானால் ஒரு கட்சியைப் போற்றியும் மற்றொன்றைத் தூற்றியும் நடுநிலை இல்லாமல் எழுதலாம். சோவின் எழுத்துக்கள் மைலாப்பூரைத் தாண்டவில்லை என நீங்கள் சொல்வது உங்கள் அறியாமையையே காட்டுகிறது. அவரது கேலிச்சித்திரங்கள் அமெரிக்காவின் times பத்திரிகை வரை புகழ் பெற்றவை. ‘மகாபாரதம் பேசுகிறது’ இன்றும் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு அற்புதப் படைப்பு.

  பிராமணனாக பிறந்த ஒரே காரணத்திற்காக மகாகவி பாரதியையே இழிவு படுத்தும் மூடர்கள் நிறைந்துள்ள இவ்வுலகத்தில், சோவுக்கு உங்கள் போன்றோரின் மத்தியில் கிடைக்கும் மரியாதை நான் எதிர்பார்த்ததே. நான் குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் சோவின் சொந்த கருத்துக்களை விடவும், ஆதாரங்களே நிறைந்துள்ளன. முதலில் அதை படித்து விட்டு அது நடுநிலையாக எழுதப்பட்டுள்ளதா இல்லை நீங்கள் சொல்வது போல் biased ஆக எழுதப்பட்டுள்ளதா எனக் கூறுங்கள். அதை விடுத்து காமாலைக் காரன் அனைத்தும் மஞ்சளாகத் தெரிகிறது என்று சொல்வது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

 11. sathappan Says:

  Lakshminarayanan sir,

  I never a saw bramin- gentlemen who accept ‘சோ, அரசியலில் வேண்டுமானால் ஒரு கட்சியைப் போற்றியும் மற்றொன்றைத் தூற்றியும் நடுநிலை இல்லாமல் எழுதலாம்.’

  Ok i appreciate your intension, but lakshmi sir, please DO NOT repeat DO NOT refer சோ for your justification/reference etc, which will only weaken your point.
  Anyway after reading almost all your postings -I conclude and say that
  Your intension (with no hidden agenda) is good, world is not harmonious as you thought it’s with full of confusion /contradictions, but be a human being who will cry for seeing any bad thing.
  Thanks and I do not want to run many replies and make your posting as a fish market. Please keep –on-writing and make your blog as goodie.

 12. Lakshminarayanan Says:

  Mr. Sathappan sir,

  Thanks for your neutral views. I reiterate here, what Cho has written in that book is all about whether a concept called brahminism really did exist or not and some references to Slokas from Vedhas and Upanishads. I am referring only to them to strengthen my arguments.

  Anyways, thanks for understanding my intentions and keep reading.

 13. santhanam Says:

  Cho does not represent brahmin. He may be Brahmin and may have individual opinion. Many anti-Tamil blogs use Cho as reason for anti-brahmin hatred. Why these same “tamils’ are also supporting reservation for Hindi speakers and other non-Tamil OBCs in Tamilnadu is not understandable.

 14. vasan Says:

  nice blog i happen to be the editor of a monthly bilingual monthly magazine called Brahmintoday which is being published from chennai for the past 58 months kindly go through the contents by visiting brahmintodayy.org where some of the issues are available you may be surprised to see most of your views are in Print and tamil pl send the feedback by mail

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.


%d bloggers like this: