பிராமணர்கள் தமிழர்களா?

எங்கே நான் சென்றாலும், எந்த வலைப்பதிவைப் பார்த்தாலும், எந்த பின்னூட்டத்தைப் படித்தாலும், அனைவரும் எழுப்பும் ஒரு வினா இது. இதற்கு ஆதாரமாக அவர்கள் மேற்கோள் காட்டுவது ஆரிய படையெடுப்பும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வுகளும். இந்த ஆரியன், திராவிடன் என்ற பாகுபாடுகள் எப்போது தொடங்கின? சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இவையெல்லாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த பின்பே தொடங்கின என்பது விளங்குகிறது. அதற்கு ஏற்றாற்போல் ஆராய்ச்சி முடிவுகள் என்று சொல்லப் பட்ட அனைத்தும் ஆரியர்கள் என்று சொல்லப்படும் ஒரு பிரிவினர் இருந்திருக்கிறார்கள், அவர்கள் இந்தியாவினும் நுழைந்து தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தி உள்ளனர் என்பதையே வலியுறுத்தின. ஆங்கிலேயர்கள் எதை சொன்னாலும் நம்பிய நம் மக்களுக்கு ஆதாரம் என்று அவர்கள் சிலவற்றை காட்டிய பின் இதுவே வேதம் என்று ஆனது. மதத்தின் பெயரால் இந்து, முஸ்லீம் என்று பிரித்திருந்த பிரிட்டிஷாருக்கு, இந்துக்களைப் பிரிக்க இது பெரிதும் உதவியது.

முதலில் ஆரியர், ஆரியர் அல்லாதோர் என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம், நாளடைவில் ஆரியர் என்போர் பிராமணர், சத்ரியர், வைசியர் என்று மருவி பின்பு ஆரியர் என்றால் பிராமணர்கள் என்றே நிலைபெற்றுள்ளது. ஆங்கிலேயர்கள் முதலில் ஆரிய பிரவேசம் பற்றி சொன்ன போது நம்பிய நம் மக்கள், இப்போது அது கட்டுக்கதை என்று நிரூபிக்கப் பட்டதை நம்ப மறுப்பது ஏன்? ஏனெனில் இந்த உண்மைகள் மக்களை சரியாக சென்றடையவில்லை. ஆரிய, திராவிட கட்டுக்கதைகளை தங்கள் சுய நலத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கழகங்கள் இப்போது நிரூபிக்கப் பட்டுள்ள எதையும் ஏற்கவில்லை. மேலும் இவ்வுண்மைகள் மக்களை சென்றடையாமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்து முட்டுக் கட்டைகளையும் இட்டுக் கொண்டுள்ளனர். இவர்கள், தங்களை பகுத்தறிவாளிகள் என்று சொல்லிக் கொள்வதில் ஏதேனும் நியாயம் உள்ளதா? எது உண்மை, எது பொய் என்று ஆராய்ந்து அறிவது அன்றோ பகுத்தறிவு. 200 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட பொய்யை நம்புவோம், இப்போது நிரூபிக்கப்படும் உண்மையை நம்ப மாட்டோம் என்று சொல்வது பகுத்தறிவா இல்லை மூட நம்பிக்கையா?

சரி. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் நமது வழக்கில் இந்த சொல் இல்லையா? இருந்திருக்கிறது. ஆனால் ‘ஆரிய’ என்ற சொல் ‘மரியாதைக்குரிய’ என்ற பொருளுடன் புழக்கத்தில் இருந்திருக்கிறதே தவிர அது ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல்லாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ‘திராவிட’ என்பதும் ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்லே தவிர ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல் அல்ல. திராவிட நாடு என்பது இன்றைய தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவை உள்ளடக்கிய (தென்னிந்திய) பகுதியாகவே இருந்திருக்கிறது. எனவே திராவிடர்கள் என்றால் தமிழர்கள் என்று ஊளையிடுவது நம் கழகக் கண்மணிகளின் அறியாமையையே காட்டுகிறது.

http://www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html

மேற்குறிப்பிட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று முழுதாக படித்துப் பார்க்கவும். ஆரிய படையெடுப்பு என்று நம்பப்படும் அனைத்தும் முட்டாள்தனமான கட்டுக்கதைகள் என்பது அப்பட்டமாக விளங்கும். இன்றைய கழகங்கள் இந்த புதிய ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். காலங்காலமாய் கூறப்பட்டு, கழகத்தின் பெயரிலும் அடிப்படை கொள்கைகளிலும் இடம்பெற்ற ஒரு விஷயம் பொய்யாவது, பொய் என்று ஏற்றுக்கொள்ளப்படுவது கழகத்தின் அடிப்படையை, ஆணி வேரை அசைத்துப் பார்த்து விடும். இந்து மதம் முழுவதும் உருவ வழிபாடும், வேத பாராயணங்களும் நிறைந்துள்ளன. வேதங்களில் முதன்மையானதும், தொன்மையானதுமான ரிக் வேதம் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, அதற்கு முன்னரே இந்து மதம் இருந்திருக்கிறது. இந்த வழிமுறைகளும் இருந்திருக்கின்றன. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழை விடவும் பழைமையான இந்த வேதங்களால தமிழ் கலாசாரம் பாதிப்படைந்து விட்டது எனும் இவர்களது குற்றச்சாட்டை நினைத்து விழுந்து விழுந்து சிரிப்பதைத் தவிர வேறேதும் செய்ய இயலாது.

சரி. ஆரியர்கள் தங்கள் கலாச்சாரத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கே விதைத்து விட்டனர், அவற்றை அகற்ற வேண்டும் என்று அலறும் நண்பர்களே, அதே போல் இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் புகுத்திய கலாச்சாரங்களையும் அகற்ற வேண்டும் என்று வாதிடுவீர்களா? காலத்தார் அழியாத எத்தனையோ அருமையான ஹிந்து படைப்புகளை தகர்த்தேறிந்தது மொகலாயர்கள் தானே? வெள்ளை புடவையிலும், வானம் பார்த்து ஏய்ந்த பூமி போல் குங்குமமற்ற நெற்றியுடனும், பெண்ணுக்கழகாம் பொன் சற்றும் இல்லாத ஏழைக்கோலத்திலும்; விதவைகள் போல் மதத்தின் பெயரால் இந்தியப்பெண்களை திரிய விட்டது கிறிஸ்தவ மதம் தானே? பகுத்தறிவு என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்றால் இவற்றையும் கண்டிக்க வேண்டாமா நமது அருமை கழகங்கள்? இதனை திரிபுவாதம் என்று சொல்லி திசை திருப்ப முயல வேண்டாம். இந்துக்களுக்கும், பிராமணர்களுக்கும் எதிராக நீங்கள் போடும் அனைத்துக்கூச்சல்களும் உங்கள் நடுநிலையற்ற தன்மையையே பறைசாற்றுகின்றன.

—எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே— 

(வளரும், வழித்தடைகள் விலகும் வரை…)

Advertisements

குறிச்சொற்கள்: , , ,

25 பதில்கள் to “பிராமணர்கள் தமிழர்களா?”

 1. yekalaivan Says:

  பார்ப்பனீயம் என்றாலே திரிபுவாதம்தான். பார்ப்பனீயம் என்ற‌ பெயர் சொன்னாலே தமிழ்மக்கள் காறி உமிழ்ந்த காலமும் இங்கே இருந்தது. வேண்டுமானால் உமது முன்னோர்கள் யாராவது இருந்தால் கேட்டுப்பாருங்கள்.

  சாதாரன மக்களுக்குள் வர்ண/சாதீய துவேஷத்தை விதைத்ததுதான் பாப்பனீயத்தின் முழுநேரவேலை. வேதம், மநு, கோயில் என்பதெல்லாம் அதனுடைய அடுத்தடுத்த யுக்திகளாக இந்த சாதிய படிநிலைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டவைதான். இப்படியிருக்க பாப்பானை அமெரிக்கன் வந்துதான் சூழ்ச்சி செய்து பிரித்துவைத்ததாக சரடுவிடுவது எல்லாம் உங்களை இங்கே மேலும் சந்திசிரிக்க வைத்துவிடும்.

  வெள்ளையன் இங்கு வருவதற்கு முன் இருந்த மன்னராட்சிக்காலத்தில், ஒவ்வொரு மன்னனுக்கும் வலதுகரமாக இருந்த அம்பிகள் (அதான் உனது முப்பாட்டன்), வெள்ளையன் கைக்கு சிறிது சிறிதாக நாடு கைமாறிய போது வெள்ளையனுக்கும் ‘மாமாவேலை’ பார்த்து, வெள்ளையனையும் கைக்குள் போட்டுவைத்துக் கொண்டு தொடர்ந்து சாதிய துவேஷத்தை காப்பாற்றிவந்தது தான் பார்ப்பனியம்.

  அதைவிடுத்து வெள்ளையன் பார்ப்பனியத்துக்கு எதிராக செயல்பட்டது போல நீங்கள் சொல்வது திரிபுதான். வெள்ளையன் உங்களுக்கு எதிராக செயபட்டிருந்தால் சாதிய படிநிலையில் உயர்ந்த இடத்தில் உங்களை பாதுகாப்போடு தக்கவைத்துக்கொண்டதற்கு பதிலாக‌ உங்களை *** வேலையில் அல்லவா அவன் நிறுத்தியிருப்பான்.

  வெள்ளையனைப் பயன்படுத்திக் கொண்டு தமது நிலையை மேலும் இறுக்கமாக கட்டமைத்துக் கொண்டு இப்போது நைசாக வெள்ளையன் மீது பழிபோடுவதை உமது அக்கிரகாரத்து அம்பிகளை வேண்டுமானால் ஏமாற்றலாம், எங்களிடம் உமது சரக்கு விலைபோகாது.

  அம்பேத்கரும், பெரியாரும், ஜோதிபாபூலேவும் கொடுத்த மரண அடியிலே அரண்டு, போக்கெடம் இல்லாமல் பார்ப்பனியம் தஞ்சம் புகுந்த இடம் தான் இந்து மதம். “நாமெல்லாம் இந்து மதத்தவர்கள் இல்லை ஓய், பார்ப்பன மதம் தான் நமது மதம்” என்று சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இதே சென்னையில் நடைபெற்ற பார்ப்பன மாநாட்டில் தீர்மானமே போட்டு பேசினான் ‘பாஷ்யம் அய்யங்கார்’ என்பவன்.

  சும்மா எப்ப‌ப்பாத்தாலும் முசுலீமைக் கேப்பியா?, கிறித்துவ‌னைக் கேப்பியா?ன்னு வெத்து ச‌வ‌டால் அடிப்பது இன்று பார்ப்ப‌ன‌ர்களைத் தவிர வேறுயாரும் அல்ல‌. முசுலீமைப் போய் நாங்க‌ ஏன்டா கேக்க‌னும் அந்த‌ மத‌த்திலிருப்ப‌வ‌ன் தானே கேட்க‌னும். நாங்க‌ள் இந்துவாக பிற‌ந்து தொலைத்த‌‌தால்தான் இதையெல்லாம் கேட்க‌வேண்டியிருக்கிற‌து.

  இனிமேலும் இந்த‌ ப‌ஜ‌னையெல்லாம் த‌விர்த்து விவாதத்தை ந‌ட‌த்துவ‌து உம‌க்கு ந‌ல்ல‌து.

  ஏக‌லைவ‌ன்.

 2. Man Says:

  Please give me some Genuine proof. Are you really trust this??????????

 3. Lakshminarayanan Says:

  @Man
  I have given enough proofs I believe. May be you can try to prove with some GENUINE proof that whatever I said is wrong…

 4. yekalaivan Says:

  என்னதான் proof. கொடுத்தாலும் ‘அது அச்சுப்பிழை’ம்பீங்க. இல்லன்னா ‘வெள்ளக்காரங்காலதுப் பேப்பர்கரவா செஞ்ச சதி’ம்பீங்க. குற்றத்த ஒப்புக்கிட்டது ஒங்க வரலாற்றிலேயே கிடையாது.

  இத்தன வருசமா உம்ம தீட்சிதக்கூட்டாளிகளின், வழக்கும், அடியும், உதையும் வாங்கிக்கொண்டு இழிவாகிக்கிடந்த எங்கள் மொழி, சற்று எதிர்த்து நின்னாக்கா, இப்போ ‘நாங்க தமிழுக்கு எதிரியல்லங்கிறீங்க’.

  எத்தன ஆதாரம் இருந்தென்ன, ஒனக்கு அது தொடைத்தெறியும் பேப்பர்தானே.

  ஏகலைவன்.

 5. Lakshminarayanan Says:

  ஏகலைவனுக்கு,

  மீண்டும் நீங்கள் தடம் மாறி செல்கிறீர்கள். இங்கு நான் எழுப்பியுள்ள கேள்வி பிராமணர்கள் தமிழர்களா இல்லையா என்பதே. பிராமணர்கள் மாமா வேலை பார்த்தார்களா இல்லை நீங்கள் பார்த்தீர்களா என்பதல்ல. நான் கேட்ட கேள்விக்கு சம்பந்தமாக உங்கள் மறுமொழியில் ஒரு வார்த்தை கூட இல்லை. நீங்கள் எங்களை திரிபுவாதம் செய்கிறோம் என்கின்றீர்கள், என்ன கொடுமை இது?

  மன்னர்கள் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் பிராமணர்கள் உயர்பதவி வகித்தார்கள் என்றால் அவர்கள் மெத்தப் படித்திருந்தார்கள். அதனால் பதவியும், புகழும் கிடைத்தன. இதில் பிராமணர்களின் ஆக்கிரமிப்பு எங்கிருந்து வந்தது? மற்றவர்கள் கல்வி கற்கக் கூடாது என்று பிராமணர்கள் தடுக்கவில்லை. மற்றவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழிலில் நாட்டம் இருந்தது, பல்லாண்டு காலம் படித்து வரும் வருமானத்தை விட்ட, அன்றன்று கிடைக்கும் வருமானமே பெரிது என்று கிடைத்த வேலைகளை செய்து வந்தனர். இதில் பிராமணர்களின் குற்றம் என்ன இருக்கிறது? உண்மையில் ஒரு புறம் படித்த பிராமணர்களை தனது அலுவல்களுக்காக பயன்படுத்திக் கொண்டு, மறுபுறம் அவர்களின் மேல் துவேஷைப் பரப்பிய பிரிட்டிஷார் பச்சொந்தியை விடவும் கீழ்த்தரமானவர்கள்.

  அடுத்த வேலை கஞ்சிக்கு வழி இல்லா விட்டாலும், ஒரு பிராமணன் தன் மகனை வேத பாட சாலைக்கோ அல்லது பள்ளிக்கோ அல்லவா அனுப்புகிறான். அந்த வைராக்கியம் உங்களுக்கு இல்லையென்றால் அதற்கு பிராமணர்கள் பொறுப்பா? உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். வேலை வாங்கிக் கொடுங்கள். அதை நீங்கள் செய்யத் தவறினால் அதற்கு பிராமணர்களை குற்றம் கூறுவது எவ்விதத்தில் நியாயம்?

  ஆரிய மாயையினால் தமிழ் கலாசாரம் சிதைந்து விட்டது என்று பலரும் கூச்சல் இட்டதாலேயே நான் மொகலாய படையெடுப்பு மற்றும் கிருத்துவ திணிப்பு பற்றி சொல்ல நேர்ந்தது. வேதங்கள் சொல்லும் வழி முறை தமிழ் கலாச்சாரம் அல்ல என்றால், லுங்கி கட்டுவதும், பேண்ட் போட்டுக் கொள்வதும், பர்தா போட்டுக் கொள்வதும் தமிழ் கலாச்சாரமா? இங்கு கேள்வி கலாச்சாரத்தைப் பற்றியே தவிர மதத்தைப் பற்றி அல்ல.

  சரி. இப்போது அனைத்து சலுகைகளும் கொடுக்கப் பட்ட பின் அதையாவது முழுமையாக பயன்படுத்துகிறீர்களா? இன்றும் 90 சதவீத இட ஒதுக்கீடு பணம் படைத்தவர்களால் தவறாக உபயோகப் படுத்தப் படுகிறதே தவிர, ஏழை மக்களை சென்றடையவில்லை. ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்ய விரும்பினால், சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் ஏழை மக்களை, சாதி வேறுபாடின்றி படிக்க வையுங்கள். அதை விட்டு, பிராமணனை தூற்றித் திரிவதால், துவேசத்தை உருவாக்குவதைத் தவிர வேறொன்றும் பயனில்லை.

  பி.கு: அனைத்து வேதங்களையும், மத வழிபாடுகளையும் தூற்றி விட்டு, நீங்கள் ‘ஹிந்து மதத்தில் பிறந்தேன்’ என்று சொல்லுவதுதான் மிகப்பெரிய நகைச்சுவையிலும் நகைச்சுவை. மனு ஸ்மிருதி பற்றி விளக்கமாக ஒரு பதிவில் உரைக்கிறேன், தொடர்ந்து படியுங்கள்.

 6. Lakshminarayanan Says:

  நீங்கள் சொல்லும் ஆதாரம் 250 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட ஆராய்ச்சி முடிவு. நான் சொல்லும் ஆதாரம் இப்போது நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவு. புளூட்டோ என்று ஒரு கிரகம் உண்டு என்று சொன்ன அதே விஞ்ஞானிகள் இப்போது இல்லை என்று சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதே போல், உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். அதை விடுத்து அநாகரீகமான பேச்சுக்களுக்கு இது இடமல்ல. அருந்தமிழ்த் தொண்டாற்றிய பிராமணர்களைப் பற்றியும் ஒரு பதிவில் எழுதுகிறேன். நீங்கள் சொல்லும் ‘இன்று நாங்கள் தமிழை ஆதரிக்கிறோம்’ என்ற வாதத்தை உடைத்தெறிய.

 7. yekalaivan Says:

  படிக்கிறதுக்கான வேலையை பார்ப்பனர்கள் பார்த்துக்கொண்டே, நாங்கள் படித்துவிடாமலிருப்பதற்கான வேலையையும் செய்துவந்திருக்கிறார்கள். அதன் பொருட்டே ‘மநுஸ்மிருதி’ நாலாஞ்சாதியான என் மூதாதையர்களின் மீது ஏவப்பட்டது. இதில் மநு பாப்பானா இல்லையா என்பதல்ல கேள்வி. அது பார்ப்பனர்களால் உயர்த்திப்பிடிக்கப்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வி.

  ஆம் என்றால் குற்றத்தை ஒப்புக்கொள். இல்லையென்றால் மநுஸ்மிருதியை கொளுத்த என்னுடன் நீவரத்தயாரா என்பதையும் தெரிவிக்கவேண்டும்.

  கஞ்சிக்கு வழியில்லாவிடாலும் பாப்பான் வேதம் தான் படிக்கவேண்டும், என்னோடு வந்து உடலுழைப்பு செலுத்தமட்டும் முடியாது. காகாசு பெறாத வேதத்த படிச்சி அத வித்து தின்னுகிட்டு கொழுத்துக்கெடந்தான். ஆனால், கஞ்சிக்கில்லாத பாப்பானுக்கு மட்டுமில்லாமல் அவன் குடும்பத்துக்கே சோறுபோட்டவன் யாரு? தன் குடும்பத்தோட அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தாலும் உழைப்பை விற்கத்தெரியாத, எம்பாட்டந்தானே?

  எங்கள் கல்விக்கு வேட்டுவைத்துவிட்டு தான் மட்டும் ஏதோ பயின்று விட்டதாக சொல்லிக்கொண்ட பாப்பான், அந்த ‘உயர் பதவி’யிலிருந்து கொண்டு என்னத்த பெருசா கிழிச்சான், அவனவன், அவனவன் தொழில செய்யிறானா, அவனவன் வர்ணக்கட்டுக்குள் இருக்கிறானான்னு வேவுபாத்து, மீறுபவனை மன்னனுக்கு போட்டுக்குடுக்குற வேலையத்தான் செஞ்சான். இதுக்குத்தான் அவன் படித்தானா?

  நான் உழைத்துக் கொட்டுவதை கைகூசாமல் வாங்கிக்கொண்டு வாய்கூசாமல் ஏப்பம்விட்டு அடுத்தநாள் அதை எந்தலையிலேயே ஏத்திவுடுவ. அது என் தலையிலிருந்து ஓட்டைவழியே முகத்தில் வழிந்தாலும் துடைத்துவிட்டுக்கொண்டு, அதே கையால (எனக்கு தண்ணியும் தான் நீ தரமாட்ட) நீயாபாத்து போடுறத சாப்பிடவேண்டும். இங்கே வெறும் வார்த்தையில் கூட உன்னால் உச்சரிக்கமுடியாமல் இருக்கிற ‘***’ (அதான் *என்று நான் மேலே எழுதியிருந்ததை நீ மொழிபெயர்த்திருந்தியே, அது) அத நான் சத்தம் போடாம அனுபவிக்கனுமா?.

  “அதெல்லாம் அந்தக்காலன்டா அம்பி, இப்பயாரு சாதிபாக்குறா?”ன்ற அம்பிக்கு ஒரு தகவல் சொல்லிக்கிறேன். இந்த குஜராத்ன்னு ஒரு மாநிலம் இருக்குது. அங்கே மோடியின்னு ஒருத்தன் முதல்வரா இருக்குறான். அவன் என்னா சொல்றான்னா, ****என்பது பகவானை சந்தோஷப்படுதுற காரியம், காலங்காலமா நீங்கல்லாம் பாகவானை சந்தோஷப்படுத்துறீங்க. அதன் மூலம் நாங்கள் உள்பட மத்த எல்லாரையும் சந்தோஷப்படுதுறீங்க தெரியுமோ’ன்னு அங்குள்ள எம்மக்களப்பாத்து உருகியிருக்குறான். இதுக்கு என்ன சொல்றீங்க.

  அதென்ன, குஜராத்துக்கெல்லம் நான் என்ன சொல்லமுடியும்?ன்னு நீ சொல்லமுடியாதே. அதத்தானே இந்தியாவுல இருக்குற ஒரேயொரு ‘இந்துராச்சியம்’முன்னு சொல்றானுங்கோ.நீயும் ஒரு இந்துன்னா இந்துராச்சியத்துலயிருக்குற இந்த கேவலத்துக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

  பிகு: நான் பிற‌ப்பால் ஒரு இந்துதான். நான் என்ன‌ செய்யற‌து, அது எந்தப்பில்லை, இத‌ற்காக‌ இன்னொரு முறையெல்லாம் நான் பிற‌ந்து பார்க்க‌முடியாது, அதுக்காக ஒம்மூடத்தனங்களையும் வேதங்களையும் ஏத்துக்கவும் முடியாது. நாங்க‌ ச‌த்திய‌மா பொற‌க்கும்போது இந்துதான். ஆனா இப்ப‌த்தான் தெரிய‌ல‌. நீயே சொல்லு நாங்க‌ல்லாம் இந்துவா இல்ல‌யான்னு. ஒனக்குத் தெரியலன்னா, இதுக்குன்னே ஒருத்தன் முட்டகண்ண உருட்டிகிட்டு வெட்டியா கெடக்குறான். அவனுக்கு ஒரு குவாட்டர வாங்கி ஊத்திவுடு சொல்லுவான். அட‌ நாங்க‌ல்லாம் ம‌னுச‌ந்தான்னே உம்பார்ப்ப‌னிய‌ம் ஒத்துக்க‌ல்ல‌, இதுல இந்துவாவ‌து வெங்காய‌மாவ‌து.

  ஏக‌லைவ‌ன்.

 8. Lakshminarayanan Says:

  ஏகலைவன் அவர்களே,
  மீண்டும் மீண்டும் பதிவிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத கேள்விகளை எழுப்பி என்னிடம் இருந்து விடைகளை எதிர்பார்க்காதீர்கள். ஏற்கனவே, நான் மனு ச்மிரிதி பற்றி தனியாக ஒரு பதிவில் விளக்குகிறேன் என்று சொல்லி விட்டேன். மனு ச்மிரிதியை எரிப்பதில் உங்களுக்கு எவ்வளவு ஆர்வம்? மனு சொன்ன கருத்துக்களில் சில உங்களுக்கு எவ்வாறு பிடிக்கவில்லையோ அதே போல், ஈ.வே.ராமசாமி மற்றும் அம்பேத்கர் சொன்ன கருத்துக்களிலும் சில எனக்கு பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்தே எரிப்போம், வருகிறீர்களா?

  உங்களை பிராமணர்கள் அடிமைப்படுத்தி வைத்து இருக்கவில்லை. யார் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் என்பது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். இன்று பிராமணர்கள் அமைதியான பிறகும் இந்த தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன. அவற்றை யார் செய்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். இருந்தும் சம்பந்தம் இல்லாமல் அறிவிலித் (illogical) தனமான கேள்விகளை எழுப்பி அதற்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

  குஜராத் பற்றி பேசும் முன்பு, 8 வருடங்களில் அந்த மாநிலம் அனைத்து துறைகளிலும் அடைந்துள்ள அசுர வளர்ச்சியை பாருங்கள். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட (உங்கள் பாஷையில்) மக்களின் இன்றைய நிலை, குஜராத்தில் இன்றைய நிலையை ஆராய்ந்து அறியுங்கள். வெறுமனே, ஆதாரம் எதுவும் இல்லாமல் பேசுவது எந்த பலனையும் தராது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, கடைசியில் எதுவும் செய்யாமல் தன் குடும்பத்தை வளர்க்கும் நம் தலைவர்களுக்கு மத்தியில், செயலில் தன் பேச்சைக் காட்டும் மோடி போன்ற அரசியல்வாதிகள் உங்களுக்கு விந்தையாகத்தான் தெரிவார்கள். மோடி பிராமணர் அல்ல என்பதையும் நினைவில் கொள்ளவும்.

  பதிவிற்கு சம்பந்தம் உள்ள கேள்விகளுக்கு மட்டுமே இங்கு விடை கிடைக்கும், சம்பந்தம் இல்லாத, illogical, அநாகரீகமான கேள்விகளுக்கு இங்கு இடம் இல்லை.

  பி.கு. இந்துவாகப் பிறந்ததால் ஒருவன் இந்து இல்ல. இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனோருவனும் இந்து இல்ல என்பதே என் தாழ்மையான கருத்து,

 9. anony munna Says:

  I have time and again seen that the brahmins are attacked vehemently at the slightest opportunity in many a discussion and felt often that brahmins get more than what they deserve.

  After reading your posts, I come to understand better why Brahmins are hated for. Your type of thinking and writing will only bolster anti-brahmin sentiments.
  I was not a born hater of Hindi. But I was made one, by some incidents.
  In typically a similar way, you are risking creation of more Brahmin haters by your writings – albeit subtly and largely unintentionally. You need examples?. Me. Think again. Is that what you want? If your answer is “yes”, then go ahead. Nobody has the right to stop you, my friend.

  P.S: This is not a feedback about this particular blog entry. But for your writings as a whole.

 10. Lakshminarayanan Says:

  Mr. Anonymous munna,

  //in many a discussion and felt often that brahmins get more than what they deserve.//

  These words of yours are enough to prove your intent of advising me not to write about the positive side of Brahmins which was never told to the world.

  I feel I am here to draw away neutral persons from becoming prey of the anti-brahmin campaign spread over Internet.

  I strongly feel that any knowledgable person who can differentiate between wise and untrue will understand my words and act accordingly. May be only who already have an animosity towards Brahmins will get their vehemence increased because of the inability to digest the truth.

  Thanks for your advice anyway and keep reading.

 11. anony munna Says:

  //These words of yours are enough to prove your intent of advising me not to write about the positive side of Brahmins which was never told to the world. //

  So you are finding reasons to establish that I am an anti-Brahmin. Hilarious. 🙂
  Are you going to write about the negative sides of brahmanism also?

  All I can find in your writings is the subtle projection of the superiority of Brahmins over others. Grow up man. Which era are you living in?

  For the record, I consider discriminatiing a human based on birth is bull shit. I am kinda atheist but dont believe that discussing it with others will change them. I respect humans. I dont believe in superiority of someone over others. If at all you find superiority somewhere, it will be temporary. How long that phenomenon will continue to be superior will be a matter of time. But none is and will be permanent. What goes up must come down. What goes down must come up. Life is a natural cycle. Anything above and below the neutral line gets pulled back to neutral line in due course. In other words, all processes get smoothened and there is definitely a way the world behaves. There cant be any extremes that can continue to eternity.

  Alright. Tell me in clear terms what are your views on the following questions:
  Are so called Brahmins superior over other human beings?
  Do you support discrimination of fellow human beings based on birth?

  If your answers are affirmative, I have got nothing to discuss with you.
  If your answers are negative, well we can discuss and get few things clarified.

  I still consider myself as a neutral person on this issue. Its your wish to continue to believe the way you replied. 🙂

  anony munna

 12. Lakshminarayanan Says:

  Mr.Anony Munna,

  First of all, let me shoot a question on you. Did you ever find I say, in any of my articles that ‘brahmins are superior than other people’? If I have ever said that, then you have all the rights to say that I am biased and my writings are biased.

  My whole objective is to make it clear that there shouldn’t be unnecessary accusations and discriminations on brahmins. You should go out and read how badly people write about Brahmins. It might be true that some unwanted things like untouchability have been executed on people by so-called upper caste people (including brahmin), but taking that as reference why to harass innocent brahmins now? Just because by birth they are brahmins, greater people including Mahakavi Bharathi are defamed in Internet.

  My answers to your questions.

  1) Nobody is superior over anybody. I don’t say that brahmins are superior and upper caste but this government does. Whats your take on that?

  2) I don’t support discrimination by on any basis including birth and I don’t try to induce such thoughts. But living in a reservation based country like India, everywhere you are reminded of your caste and religion even if you don’t want to. I strongly believe that if at all any reservation should be there, it should be based on the financial ability of the family.

  Since you said you are an atheist, you will never believe principles of Hinduism or any other religion for that matter. But being a spiritual (rather religious) person, I cannot stop from writing things drawn from Hinduism. I am not writing in support of brahmins, rather I am just defending various accusations made in various forums. So, this is just a reaction.

 13. Jayaraman Says:

  http://jayaraman.wordpress.com/2008/04/17/brahmins/

 14. Lakshminarayanan Says:

  மிக்க நன்றி திரு ஜெயராமன் அவர்களே. நல்லதொரு பதிவு. இதே ஆதாரங்களுடன் நான் கூறிய எதனையும் என்னுடன் வாதமிட்ட யாரும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. கருணாநிதி இதனை ஏற்றுக் கொண்டால், காலங்காலமாக மக்களை ஏய்த்து வரும் விஷயம் அம்பலமாகி விடும் அல்லவா. அது திராவிட (?) கழகங்களின் ஆணி வேரையே அசைத்து விடும் அல்லவா. அதனால்தான் இந்த ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இன்னமும் அனைத்து அரசுப் பள்ளிகளின் பாடங்களில் கைபர் போலன் கணவாய் வழியே ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தனர் என்றே சொல்லப்படுகிறது.திருத்த ஆளில்லை.

  ஆங்கிலேயர்கள் சென்று காலம் பல ஆன பின்னும், அதே பிரித்தாளும் கொள்கைகளைப் பயன்படுத்தி சுயலாபம் பார்த்து வரும் கயவர்களைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் இவர்கள் நம்பப் போவதில்லை. தங்களை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டு இந்த திராவிட கழகங்களும், கம்யுநிச்ட்களும் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. மத்தியில் மதசார்பின்மை என்பது முஸ்லீம் மற்றும் கிருத்துவர்களை திருப்திப் படுத்துவது. தமிழகத்தில் மதசார்பின்மை என்பது இந்து மதத்தை இழிவு படுத்துவது. இதுதான் 80% இந்துக்கள் வாழும் இந்தியாவின் இன்றைய நிலை.

  சாதியை ஒழிக்கிறேன், ஒழிக்கிறேன் என்று சொல்லி மேலும் மேலும் இட ஒதுக்கீடுகளை கொடுத்து சாதீயத்தை ஆழப் படுத்துகின்றனர். இது எங்கு பொய் முடியப் போகிறதோ?

  மீண்டும் நன்றி, நல்லதொரு பின்னூட்டப் பதிவிற்காக. தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து வாருங்கள். தங்களைப் போன்றோரின் ஆதரவு எனக்கு அவசியம் தேவை.

 15. Michael Joseph Says:

  I drank water in my friends house. He put the glass in the sink and for a second glass o0f water he gave me another glass of water and it also went to the sink.

  Is it for Hygeine reasons. Do I have to believe that

 16. Man Says:

  நீங்கள் இந்துவா ? இல்லையா என்பதை திரு லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதி இருப்பதையும், முன்னாள் தமிழ்மண பதிவர் திரு ஜெயராமன் அவர்களின் இடுகையை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.

  பி.கு. இந்துவாகப் பிறந்ததால் ஒருவன் இந்து இல்ல. இந்து மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரியும் எவனோருவனும் இந்து இல்ல என்பதே என் தாழ்மையான கருத்து,

  – மேற்கண்ட இந்த பொன்னெழுத்தை நான் கண்டது, திரு லட்சுமிநாரயணன் அவர்களின் பார்பனர்கள் தமிழர்களா ? என்ற பதிவில்.

  பார்பனர்கள் தாங்களே தமிழர்கள் இல்லையா என்று பேச ஆரம்பத்துவிட்டதிலிருந்தே எனக்கு அதில் கருத்து கூற ஒன்றும் இல்லை. இங்கே இவர் சொல்கிறார், ‘இந்து’ என்பதற்கு அடையாளம் இருக்கிறதாம், இந்து மதக்கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவன் இந்து இல்லையாம் ?

  இந்துமதக் கோட்பாடு என்றால் என்னவென்று யாருக்காவது தெரியுமா ? பகவத்கீதை என்ற மனுச்சார்பு, வைணவசார்பு நூல் தவிர்த்து இந்துமதம் சார்பாக எதாவது நூலோ கோட்பாடோ இருக்கிறதா ? அடுத்து இவர் சொல்கிறார், வேதங்கள் பொய் என்று சொல்லிக் கொண்டு திரிபவர் இந்து இல்லையாம் ? வேதங்கள் உண்மை என்று தானே ஆராய்ச்சியாளர்கள் கூடச் சொல்கிறார்கள், அது உண்மை இல்லை என்றால் தஸ்யூக்களை அழித்தகதையும், இந்திரனுக்கு பிடித்த பாணம் சோமபானம் என்றும் அதை ஆரியர்கள் அமுதமாகவே பருகினார்கள் என்றே தெரியவந்தது. வேதங்கள் உண்மைதான் ஐயா. சத்தியமான உண்மை, ஆனால் அந்த வேதங்கள் யாருக்கானது என்பது தெரிந்ததால் தான் பார்பனர்தவிர்த்து மற்றவர்கள் அதில் எந்த ஈடுபாடும் காட்டுவதில்லை. பார்பனர் வேதத்ததை பார்பனர் அல்லோதோர் படித்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வரத்தானே பார்பனர் அல்லோதோர் (சூத்திரன்) வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும், நாவை அறுக்க வேண்டுமென்றெல்லாம் மனுவேதம் இயற்றி அதை மன்னர்களால் செயல்படுத்த வைத்து, நிறைவேற்றாவிடில் ஆட்சிக்கு அபச்சாரம் நேர்ந்துவிடும் என்றெல்லாம் கதைகட்டி விட்டார்கள். இதையெல்லாம் இந்து என்பதால் பார்பனர் அல்லோதோர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது என்ன வகையான கட்டாயம் ? முதலில் இந்து என்ற அடையாளம் இதுவெல்லாம் என்று எதாவது இருக்கிறதா ? என்னைக் கேட்டால் காதுக் குத்திக் கொள்ள மறுப்பவன் இந்து இல்லை என்று சொல்லலாமா ? இல்ல (குடும்ப) வழக்கத்தின் காரணமாக பகுத்தறிவாளர்கள் கூட காது குத்திக் கொள்ளவது உண்டு.

  லட்சுமி நாராயணன் அவர்களே, வேதங்களில் சொல்லி இருப்பது போல் மூவர்ணத்தாரில் யார் யாரெல்லாம் பூணூல் அணியவில்லையோ அவர்களெல்லாம் இந்து இல்லை என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை ? இந்தியாவில் இருக்கும் 50 விழுக்காடு மக்கள் தொகை பழங்குடியினர் மற்றும் தலித் பெருமக்களே, இவர்களையெல்லலம் சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே இரவில் இந்துவாக அறிவித்தது அவர்களைக் கேட்டுத்தான் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா ? இல்லை அவர்கெளெல்லாம் நீங்கள் சொல்லும் இந்து மத கோட்பாடுகளை, வேதங்களை ஏற்றுக் கொண்டு இந்துவாக மாறினார்களா ?

  நீங்கள் சொல்லும் இந்துமதக் கோட்பாடுகளையும், இந்துவேதங்களையும் பார்னர்கள் தான் ஏற்றுக் கொள்கிறார்கள், ஆகவே இதை வைத்து உறுதியாகச் சொல்ல முடியும், பார்பனர் தவிர்த்து, இந்து அரசியல் தெரியாதவர்கள் தவிர்த்து எவருமே இந்து இல்லை, மற்றவர்கள் எல்லோரும் வயிற்றுக்குள் சுமக்கும் மலம் போல, வேறு வழியின்றி இந்து மதம் என்ற பெயரை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பெரியாருக்கும் முன் கோவில் வாயில் கதவுகளையும் சாத்தி வைத்திருந்தது தான் தாங்கள் சொல்லும் கோட்பாடு என்ற பெயரில் கட்டுப்பாட்டில் இருந்த இந்துமதம்.

  நீங்கள் சொல்வது போல் இல்லாவிடில் ஒருவர் இந்து இல்லை என்று வைத்துக் கொள்வோம், ஒருவன் ஒரு பார்பனன் இல்லை என்று எவ்வாறு சொல்வீர்கள் ?

  ஒரு வேண்டுகோள், பிறப்பினால் பார்பனாக பிறந்ததால் ஒருவன் பார்பனன் இல்லை என்றும், யார்யெரெல்லாம் பார்பனர் இல்லை என்று தெரிவித்து ஒரு பட்டியல் அளித்தால் நன்றாக இருக்கும்.

 17. Lakshminarayanan Says:

  Man அவர்களே,

  நீங்கள் எனது முழுமையான பதிவையும், பின்னூட்ட உரையாடல்களையும் படிக்காமல் கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். முதலில், ஆரியர்-திராவிடர் என்ற பிரிவினையே ஆதாரமற்றது. இதில் ஆரியர்-பார்பனர் என நீங்கள் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. இந்து மதம், மதம் என்பதை விட ஒரு வாழ்க்கை முறை. வெறும் சாதி அரசியலுக்காக நான் இந்துவாகப் பிறந்தேன், ஆனால் அதன் வேதங்களிலோ, கோட்பாடுகளிலோ, வழிமுறைகளிலோ எனக்கு நம்பிக்கையில்லை எனக் கூறிக் கொண்டு திரிபவர்களே இந்துக்கள் இல்லை என்பது நான் சொல்ல வந்த கருத்து. முன்பு நாம் கடைப்பிடித்த பல விஷயங்களை இப்போது செய்வதில்லை (உதாரணமாக வர்ணாசிரம முறைகள்). வழிமுறைகளை கடைப்பிடிக்க இயலாத போதும், தன் மதத்தின் மீது மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவனே உண்மையான இந்து.

  மனுதர்மம் பற்றியும், அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது பற்றியும், அதனை எழுதியது பிராமணர்களா என்பது பற்றியும் விரிவாக இருபதிவுகளில் எழுதியுள்ளேன். படித்துத் தெளிவடையுங்கள்.

  நான் ஏற்கனவே என் பதிவுகளில் சொல்லியுள்ளபடி ‘தலித்’ அல்லது ‘தாழ்த்தப்பட்டவர்’ என்ற ஒரு பிரிவே வேதங்களிலோ, இந்து மத புராணங்களிலோ இல்லை. இது பிற்பாடு உயர் சாதி இந்துக்கள் (பிராமணர்கள் மட்டும் அல்லர், அனைவருமே) என்று தங்களை சொல்லிக் கொண்டோரால் உருவாக்கப்பட்ட பேதம். நீங்கள் சொல்வதுபோல் இங்கு யாரும் அதிகாரத்தினால் ‘இந்து’வாக வாழவில்லை. தன் மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவனே கடைசி வரை அதனை கடைப்பிடிக்கிறான். இல்லாதவன் மற்ற மதங்களுக்கு மாறுவதும், மாறிய பின் அங்கு அவர்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

  கிருத்தவமும், இஸ்லாமும் மக்களை மாக்கள் போல அடிமைப்படுத்தி விற்றுக் கொண்டிருந்த காலத்தில், நல்ல கட்டமைப்பான சமுதாயத்தைக் கொண்டிருந்த ஒரே மதம் இந்து மதம். யாரோ சில பேர் செய்த மூளைச்சலவையினால் பல தலித் அமைப்புகள் இந்து மதத்திற்கு எதிராகவும், மற்ற மதங்களைப் போற்றியும் பிரச்சாரம் செய்து வருவது வேதனைக்குரிய விஷயம்.

 18. Lakshminarayanan Says:

  @Michael Joseph

  This question should have been asked to your friend when he was putting the glass into the sink. I really don’t know the intention behind your friend doing like this and cannot comment on that without knowing so.

  In my house, whoever drinks a cup of water, we clean the glass immediately. Does it mean that we follow untouchability amongst ourselves?

  For a jaundiced person, everything will look yellow only.

 19. யாத்திரிகன் Says:

  >>>முதலில் ஆரியர், ஆரியர் அல்லாதோர் என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம், நாளடைவில் ஆரியர் என்போர் பிராமணர், சத்ரியர், வைசியர் என்று மருவி <>>>மறுபுறம் அவர்களின் மேல் துவேஷைப் பரப்பிய பிரிட்டிஷார் பச்சொந்தியை விடவும் கீழ்த்தரமானவர்கள்.<<>>கஞ்சிக்கு வழி இல்லா விட்டாலும், ஒரு பிராமணன் தன் மகனை வேத பாட சாலைக்கோ அல்லது பள்ளிக்கோ அல்லவா அனுப்புகிறான் <<

  oh is that why those ppl have started crossing the sea for earning , living & education ?! violating the rules of not to cross the sea ?!

 20. thamizh Says:

  பெரியார் – கன்னடம் பேசும் ‘தமிழர்’
  கருணாநிதி – தெலுங்கு ‘தமிழர்’
  வைகோ – தெலுங்கு பேசும் ‘தமிழர்’
  OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் ‘தமிழர்’ இருக்காங்க…
  இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக…Madras airportல எல்லாமே இந்திக்காரங்க… நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத ‘தமிழர்’களா…

  பார்ப்பான் தமிழ் பேசும் ‘அன்னியன்’.

  ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் ‘தமிழர்கள்’ல எத்தனை பேர் தெலுங்கு…

  பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க …வேறன்ன?

  இப்ப குஜராத்துல குஜ்ஜார்…தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க…நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க…பார்ப்பான் இல்ல….OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு…உத்தப்புரம் வெறும் உதயம்…

  அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி…யார்யா அங்க பார்ப்பான்?

  இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் ‘தமிழ்’ அடியாட்கள் நிறைய போல….ஹீ ஹீ!!!

 21. Lakshminarayanan Says:

  @யாத்திரிகன்
  நான் ஏற்கனவே உங்கள் கேள்விக்கு பதில் அளித்து விட்டேன். எனது முதல் பதிவை (இணையத்தில் பிராமண துவேஷம்) மீண்டும் ஒருமுறை தெளிவாகப் படிக்கவும்.

 22. ரகு ஐயர் Says:

  லக்ஷ்மி நாராயணன் அவர்களே. இந்தப் பகுத்தறிவுப் பன்னாடைகளின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பது மிகவும் அருமையாக உள்ளது.
  வாழ்த்துக்கள். வணங்குகிறேன். சமயம் வரும்போது நானும் பதில் அளிப்பேன்.

 23. செந்தழல் ரவி Says:

  பிராமணர்கள் தமிழர்கள் அல்ல…

  அய்ரோப்பியன் தமிழன் அல்ல…அவன் வெள்ளையா இருக்கான்…
  ஆப்ரிக்கன் தமிழன் அல்ல…அவன் ரொம்ப கருப்பா இருக்கான்…முடியெல்லாம் சுருட்டை சுருட்டையா…
  சீனாக்காரன் தமிழன் அல்ல..அவன் குட்டையா மூக்கு சப்பையா இருக்கான்…
  பிராமணன் தமிழன் அல்ல…அவனும் வெள்ளையா இருக்கான்…அவன் ரஷ்யா ஓல்கா நதிக்கரையில் இருந்து நடந்துவந்தவன்..
  தமிழன் கருப்பாவோ, மாநிறமாவோ இருப்பான்…

  Race என்ற சொல்லாடலை கேள்விப்பட்டிருக்கிறீங்க இல்லையா ? Difference Race will have different body structure and color.

 24. Lakshminarayanan Says:

  செந்தழல் ரவி அவர்களே, உங்களின் விஞ்ஞானப் பூர்வமான விளக்கத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்து விட்டேன் 🙂

  பிராமணர்களில் கருப்பான ஆசாமிகளைத் தாங்கள் பார்த்தே இல்லை போலும். அதே போல் மற்ற பிரிவினரிலும் வெள்ளையாக உள்ளவர்களையும் பார்த்ததில்லை போலும். வெள்ளையா இருந்தா உடனே ரஷ்யாவா? தவறு என்று நிரூபணம் செய்யப்பட்ட ஆரியர்-திராவிடர் கருத்தை இன்னும் எத்தனை நாள்தான் சுமக்கப் போகிறீர்கள்?

  Race என்ற சொல்லை யாம் அறிவோம். People from different race may (will) have different body structure and color என்பதையும் யாம் அறிவோம். தாங்கள் திடீர்மாற்றம் என்று சொல்லப்படும் Mutation பற்றி சிறு ஆராய்ச்சி செய்வது நல்லது. ஒரே இனத்தில் வெவ்வேறு குணாதியங்களுடன் பிறக்கும் உயிர்களைப் பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. நியாண்டர்தால் என்று சொல்லப்பட்ட கருப்பு ஆதி மனிதனிலிருந்து வெள்ளை மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதையும் விளக்குகிறது. புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இருக்குமா என்பது சந்தேகமே!

 25. sarangapani Says:

  செந்தழல் ரவி அவர்களே :

  உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
  இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

  தமிழ் பிராமணர்கள் வீட்டில் கருணாநிதியை போல தெலுங்கு பேசுவதில்லை; அல்லது மற்ற முஸ்லீம் OBC ‘தமிழ்ர்கள்?’ போல் இந்தி பேசுவதில்லை…

  தமிழ் OBC பட்டியல் இடம் பெரும் ‘தமிழர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

  கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
  வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
  ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

  நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

  சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

  தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
  விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

  வந்ததா? இல்லை.

  இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

  அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

  சரி உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
  அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
  கீரிப்பட்டியில் ? இல்லை …
  ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தன் தெரியணும்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.


%d bloggers like this: