நீண்டதொரு இடைவெளி

நான் சற்றும் எதிர்பாரா வகையில் வாழ்வில் திருப்பங்கள். வேலைப்பளு வேறு அதிகமாகி என்னை வேறு எது பற்றிய சிந்தனையும் இல்லாமல் செய்து விட்டது. எவ்வளவோ முறை முயன்றும் எனது வலைப்பூவில் புதிய பதிவுகள் இட நேரமும், சூழ்நிலையும் அமையவில்லை என்பது வருத்தமே. இப்போதும் வேலைப்பளு சிறிதும் குறையவில்லை. இன்னமும் பிராமண  துவேஷம் சிறிதும்  குறையாது இருப்பது அதனை விட மிகப்பெரிய வருத்தம். இன்னும் சொல்லப்போனால், இணையத்தில் இந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சியைக் காட்ட இயலுமா என்று வியக்கும் அளவுக்கும், முகம் சுளிக்கும் அளவுக்கும் இருக்கின்றன சில பதிவுகள். இப்பதிவாளர்கள் உண்மையிலயே படித்தவர்களா, பண்பாளர்களா என்பது சர்ச்சையே இல்லாமல் அவர்கள் எழுத்துக்களின் மூலமே நிரூபிக்கப் பட்டு வருகிறது. யாரையும் பெயர் குறிப்பிட்டு அவர்கள் அளவுக்கு என் நிலையை நான் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

நான் செய்ய விரும்புவதெல்லாம் தன்னிலை விளக்கம், காழ்ப்புணர்ச்சியினால் காயப்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூகத்தின் தன்னிலை விளக்கம். பொய்யான வரலாற்றுக் கதைகளாலும், புனையப்பட்ட நிகழ்வுகளாலும் நடுநிலையாளர்கள் நிலை தடுமாறி அநீதிக்கு வழி விடக்கூடாதே என்ற எண்ணம். அவ்வளவே நான் இங்கு செய்ய விரும்புவது. கீழ்த்தரமான, கொச்சையான வார்த்தைகளால் எனை சாடும் நண்பர்கள் தாங்கள் தங்களையே தாழ்த்திக் கொள்கிறார்கள். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் அறிவிலி நான் அல்ல.

ஆக, ஒரு (பெரிய) இடைவெளிக்கு பிறகு என் எழுத்துப்பணி தொடர்கிறது என்பதே நான் சொல்ல வந்த தகவல்.

—————– சர்வே ஜனா சுகினோ பவந்து  ———————

Advertisements

குறிச்சொற்கள்:

2 பதில்கள் to “நீண்டதொரு இடைவெளி”

 1. அருண் Says:

  அன்புள்ள லக்ஷ்மிநாராயணன்,

  அரிய சேவை தாங்கள் செய்து வந்தது! இடையில் சில காலம் பதிவுகள் ஏதும் இல்லாதிருக்கவே, என்ன ஆனதோவென்று வியந்ததுண்டு! ஆகவே, தற்போது தாங்கள் பதிவுலகத்துக்குத் திரும்ப வருவது கண்டு மகிழ்ச்சி!

  தாங்கள் ஏற்றுக்கொண்ட பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.

  -அருண்.

 2. Cinema Virumbi Says:

  அன்புள்ள திரு லக்ஷ்மிநாராயணன்,

  உங்கள் பதிவுகள் படிக்கத்தூண்டுபவையாக உள்ளன. மேலும் எழுதுங்கள்.

  என் புதிய (கிட்டத்தட்ட!) வலைத்தளத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும்

  நன்றி!

  சினிமா விரும்பி

  http://cinemavirumbi.tamilblogs.com

  ramesh_vee@cooltoad.com

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.


%d bloggers like this: