இந்துத்தீவிரவாதம்!

எனது வலைப்பதிவிற்கு இது சற்றே பொருந்தாத பதிவு போல் தோன்றினாலும், இன்றைய சூழ்நிலையில் விவாதிக்கப் பட வேண்டிய ஒரு விஷயம். இதைப் பற்றி எழுத வேண்டுமென்று எனக்கு நெடுநாளாக எண்ணம் இருந்த போதிலும், சரி வர கருத்துக்களை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. இந்நிலையில்தான் பிரான்கோஇஸ் காஷியரின் இப்பதிவைப் பார்க்க நேர்ந்தது. சரி, எனது பதிவை மீண்டும் துவக்க இதுவே சரியான தலைப்பு என்று தோன்றியது. அவரது கருத்துக்களுடன் என் கண்ணோட்டமும் இணைந்து, உங்களுக்காக.

 

இந்துத்தீவிரவாதம் என்று ஏதேனும் உள்ளதா? அண்மையில் நடந்த பல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இச்சொல்லை பத்திரிக்கைகள் வழியாகவும், இணையத்திலும் பரப்பி வருகின்றன. அதற்க்கு முத்தாய்ப்பாய் பிரக்யா சிங்கின் கைது, சர்ச்சைக்குரியஉரையாடலின் ஒலிப்பதிவு என எங்கும் பரபரப்பு. ஏதாவது சந்தர்ப்பம் கிட்டாதா என காத்துக் கிடந்த முஸ்லீம் இயக்கங்களுக்கும், கம்யுநிச்ட்களுக்கும் வெறும் வாயை மெல்ல அவல் கிடைத்தாற்போல் இந்த நிகழ்வு அமைந்து விட்டது. விளைவு? இந்துத்தீவிரவாதம் என்னும் புதிய சொல் அகராதியில் ஏற்றப்பட்டு விட்டது.

 

எத்தனை மதங்கள் வந்த போதும், சென்ற போதும், கோடிக்கணக்கானோர் மத மாற்றம் செய்யப் பட்ட போதும், பாரதத்தின் பெருமை, கலாசாரம், இந்து மதத்தில்தான் அமைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. வந்தாரை வாழ வைத்ததோடு நில்லாமல், அவர்களது கொள்கைகளையும், மதக் கோட்பாடுகளையும் தன் மண்ணில் வளர விட்ட பெருந்தன்மை இந்து மதத்தையும், இந்துக்களையும் தவிர வேறு யாரைச் சேரும் இங்கு? அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழும் இந்துக்களின் கோபத்தின் வெளிப்பாட்டை சிமி போன்ற மனிதமற்ற இயக்கங்களோடு சமப்படுத்தி பேசுவது வேதனைக்குரியது. மங்களூரில் இந்து மதத்தை, அதன் கோட்பாடுகளை அசிங்கப்படுத்திய ஒரு சர்ச்சைத் தாக்கியதற்கு, புஷ்ஷிடம் மன்னிப்பு கேட்கிறார் நம் பிரதமர். ஆஸ்திரேலியாவில் ஒரு முஸ்லீம் தீவிரவாதி சிறைப்பட்டதால் தன் தூக்கம் பொய் விட்டதாக பொது அறிக்கை கொடுக்கிறார். என்ன நடக்கிறது இங்கு?

 

ஒரு உயிர்ச்சேதமும் இல்லாத பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு பல வருடங்கள் ஆன பின்னும், இன்றும் அது நினைவு கூறப்படுகிறது. எத்தனை குண்டு வெடிப்புகள்? எத்தனை உயிரிழப்புகள்? யாரேனும் அதைப் பற்றி விவாதிக்கின்றனரா? இது இன்று நேற்றல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் கொடுமை. தைமூர் லட்சக்கணக்கான இந்துக்களை கொன்று குவித்த போதும், போர்ச்சுக்கீசியர்கள் பிராமணர்களை கோவாவில் கூண்டோடு அழித்த போதும் வராத ரோஷம் இந்துக்களுக்கு இப்போதா வந்து விடப் போகிறது என்ற எண்ணமே இத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் காரணம். அது சிறிதே தலைகாட்டினால் அதன் பெயர் தீவிரவாதம்.  எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்துக்களுக்கு பாதகமாகவே நடந்து கொள்ளும் போதும், இது வரை பொறுமை காத்த இந்துக்கள் சற்றே கோபப்பட்டால் அதன் பெயர் தீவிரவாதம்.

பல லட்சம் பண்டிதர்கள் இருந்த காஷ்மீரில் இன்று சில நூறு பேரே எஞ்சியுள்ளனர். அதனைப் பற்றி எந்த அரசியல் கட்சியாவது கேள்வி எழுப்புமா? எந்த நண்பராவது தன் வலைப்பதிவில் எழுதுவாரா? பெரும்பான்மை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு இனத்தை இதற்குமேல் யாரும் வஞ்சித்திருக்க இயலாது. ஹஜ் பயணத்திற்கு முழு செலவும் ஏற்றுக்கொள்ளும் அரசு அமர்நாத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர இயலவில்லை. ஒரு முஸ்லீம் தீவிரவாதிக்காக துக்கப்படும் பிரதமர் ஆயிரக்கணக்கான பாமரர்களை பணத்தைக்காட்டி மத மாற்றம் செய்பவர்களை தட்டிக்கேட்ட 80 வயது முதியவரின் கொடூர கொலைக்கு வருத்தப்படவில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மை இந்நிலையில் இருக்கையில், கோபப்படாதீர்கள் என்று எத்தனை காலம் கட்டுப் படுத்த இயலும், முதுகெலும்பில்லாத என் இந்து சகோதரர்களை?

Advertisements

குறிச்சொற்கள்:

2 பதில்கள் to “இந்துத்தீவிரவாதம்!”

  1. கொடும்பாவி-Kodumpavi Says:

    //ஒரு உயிர்ச்சேதமும் இல்லாத பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு //

    இத மட்டும் நீங்க சொன்னது தப்புங்க. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது பல நூறு இந்துக்களும் முஸ்லீம்களும் கொல்லபட்டிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன மற்றதெல்லாம் சரி.

  2. Lakshminarayanan Says:

    கொடும்பாவி அவர்களே, தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! நான் சொல்ல வந்தது யாதெனில், பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்பதே. அதன் பின்னர் நிகழ்ந்த வன்முறையில் பல நூறு அப்பாவிகள் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.


%d bloggers like this: